கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் அந்த தங்க கவசங்கள் கழற்றப்பட்டு செப்பனிடுவதற்காக சென்னை காணொளி வைக்கப்பட்டது. அப்போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அந்த தங்க கவசத்தை செப்பனிட்ட பின் அதன் எடை 38 கிலோவாக குறைந்தது.
இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி ஜெயக் குமார் ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். சிறப்பு குழுவினர் நடத்திய விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்ட தேவசம் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் குருவாரூர் ஐயப்பன் கோவிலிலும் பல தவறுகள் நடந்திருப்பதாக தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளி நகைகள், யானை தந்தங்கள் குங்குமப்பூ உள்ளிட்ட பொருட்கள் கருவூலத்திலிருந்து மாயமாகி இருப்பதாகவும் பல மதிப்புமிக்க பொருட்கள் கணக்கில் வராமல் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கேரள பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் உள்பட கேரளா கோவில்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அனைத்து தேவசம்போர்டுகளையும் இந்திய தலைமை கணக்காளர் முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…