முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோதே கலாமின் உயிர் பிரிந்தது. அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவுநாளையொட்டி இராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கலாமின் எளிமை மற்றும் தொலைநோக்குப் பார்வையே தங்களின் நேர்மையான பயணத்திற்கு வழிகாட்டி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், அப்துல் கலாமின் உன்னத லட்சியங்களைப் பின்பற்றி ‘WE THE LEADERS’ அமைப்பைச் செம்மையாக நடத்திச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அவரது பிறந்தநாளான அக்டோபர் 15 அன்று கோவையில் ‘Centre of Ethics in Politics’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் அவர் நம்பிக்கையோடு அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…