பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் பகதூர்கே பகுதியில் வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் அதிவேகமாக வந்த ‘டாடா டியாகோ’ எலக்ட்ரிக் கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீறி வந்த அந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கொடூரமாக மோதியது.
இதில் காரின் மோதிய வேகத்தில் பைக் ஓட்டி வந்த நபர் காற்றில் சுமார் 15 அடி உயரத்திற்குப் பறந்து, 30 அடி தூரத்திற்கு அப்பால் வீசி எறியப்பட்டார். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து சீறிப் பாய்ந்த கார், எதிரே வந்த ஆக்டிவா ஸ்கூட்டர் மற்றும் இரு இ-ரிக்ஷாக்கள் மீது சடசடவென மோதியது. இதில் ஒரு இ-ரிக்ஷா தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்ததும் காரை ஓட்டி வந்த நபர் சரியாக நடக்கும் நிலையில்கூட இல்லாமல் குடிபோதையில் இருந்ததாகக் அங்கு இருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்த சேலம் தப்ரி காவல் நிலைய போலிஸார் காரின் டிரைவரைக் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…