ஃபோம் தாள்களால் நேர்ந்த கொடூரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியான அதிர்ச்சி பின்னணி… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேர்ந்த எதிர்பாராத தீவிபத்தில், ஒரு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து புடவை மடிக்கும் பணிக்காக வந்த இவர்கள், மூன்று அடுக்கு மாடி வீட்டில் ஃபோம் தாள்களைக் கொண்டு பேக்கிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்விடச் போர்டிலிருந்து உருவான மின்பொறி ஃபோம் தாள்களில் பட்டுத் தீப்பற்றியுள்ளது. தீப்பரவல் ஒருபுறம் இருக்க, அந்தத் தாள்கள் எரிந்தபோது வெளிவந்த நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் புகை அவர்கள் அனைவரும் மயக்கமடையக் காரணமாகியுள்ளது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு, வீட்டிற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். ஃபோம் தாள்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், தீப்பற்றிய வேகத்தில் ரசாயனப் புகை வீடு முழுவதும் பரவி அவர்களின் உயிரைப் பறித்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.

Devi Ramu

Recent Posts

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 minutes ago

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

6 minutes ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

15 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

17 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

37 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

49 minutes ago