ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் கடற்பகுதியில் இயந்திரப்படகில் மீன்பிடி செய்து கொண்டிருந்த காரல் என்ற மீன்பிடித் தொழிலாளிக்கு இரண்டு கூறல் மீன்கள் வலையில் சிக்கியது. 22 கிலோ, 24 கிலோ என 46 கிலோ எடைகொண்ட அந்த மீன்கள் கிலோவுக்கு 3,600 ரூபாய் என்ற கணக்கில் மொத்தமாக 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின.
சாப்பாட்டுக்கு பயன்படாத இந்த மீன்களின் உயர்ந்த விலைக்கு காரணம் வயிற்றின் உள்ளே இருக்கும் குழாய் போன்ற உறுப்புதான். மீன்பிடி மக்கள் இதை பண்ணா என்று கூறுகின்றனர். இது பல்வேறு மருந்து தயாரிப்புகளுக்கு அவசியமாக இருப்பதால் விலை அதிகமாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஆபரேஷன் முடிந்த பிறகு தையல் போடும் நூலிழை போன்ற பொருள் உருவாக்க இது பிரதானமாக உதவுகிறது.
மீன் எவ்வளவு உருவத்தில் பெரியதோ அவ்வளவு பண்ணா அளவும் பெரிதாக இருக்கும். அதனால் பெரிய மீன்கள் லட்சங்களில் ஏலம் போகும். கடல் பொன், கருந்திட்டு கத்தாளை என்ற வேறு பெயர்களையும் கொண்ட இந்த கூறல் மீன்கள் ஆஸ்திரேலிய கடற்பகுதிகளில் அதிக அளவில் காணப்படும். இதய சிகிச்சைக்கும், மது பானங்களுக்கு ருசி சேர்ப்பதற்கும் உதவுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…