நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்து… தூக்கத்தில் அலறிய பயணிகள்… அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 13 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, நூறு அடி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பேருந்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனிக்காத ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை இயக்கி வந்த நிலையில், பின்னால் ஆட்டோவில் வந்த ஓட்டுநர் ஒருவர் இதனை உடனடியாகக் கவனித்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பேருந்தை முந்திச் சென்று, ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை நிறுத்தச் செய்தார்.

ஆட்டோ ஓட்டுநரின் சமயோசித எச்சரிக்கையைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட, உள்ளே இருந்த 13 பயணிகளும் பதற்றத்துடன் கீழே இறங்கினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீயைக் கண்டறிந்து உயிர்களைக் காத்த ஆட்டோ ஓட்டுநரின் தீரச் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.