#image_title
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பிரம்மயுகம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் மூன்று படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் விஜயின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, கமலின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது. வருகிற மே மாதம் மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. முதலாவதாக நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்திருக்கும் அவரது 50-வது படம் ராயன்.
இந்த படத்தில் சந்திப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா. இந்த படம் மே மாதம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படங்களாவது தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…