#image_title
நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜயகாந்த் 1980, 90களில் இருவரும் மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்தனர். பல படங்கள் அவர்கள் நடிப்பில் வெளிவந்தன. குறிப்பாக பொங்கல், தீபாவளி காலகட்டங்களில் இவர்களது படங்கள் நேரடியாக மோதின. இதில் எந்தெந்த படங்கள் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் அதிக படங்களில் வெற்றி பெற்ற நடிகர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 1981ல் வெளிவந்த கமல் நடித்த சங்கர்லால், விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி ஆகிய படங்களில் 100 நாட்கள் ஓடி சிவப்புமல்லி வெற்றி பெற்றது.
#image_title
அடுத்து மூன்றாம்பிறை, பார்வையின் மறுபக்கம் ஆகிய படங்கள் வெளியானது, இதில் கமல் நடித்த மூன்றாம் பிறை படம் வெற்றி பெற்றது. அடுத்த எனக்குள் ஒருவன், வைதேகி காத்திருந்தாள் படங்கள் வெளியான நிலையில், 200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் வெற்றி பெற்றது. ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை, புன்னகை மன்னன், காதல் பரிசு, நாயகன், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன் என கமல் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், அந்த படங்களுக்கு போட்டியாக வெளியான விஜயகாந்த் நடித்த படங்கள்
அலை ஓசை, ராமன் ஸ்ரீராமன், ஏமாறாதே ஏமாற்றாதே, தழுவாத கைகள், சிறைப்பறவை, தர்மம் வெல்லும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், காவியத்தலைவன் போன்ற விஜயகாந்த் படங்கள் தோல்வியடைந்தன. இந்த காலகட்டத்தில் தர்மதேவதை, உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, நல்லவன், தம்பி தங்க கம்பி, ராஜ நடை, சத்ரியன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றி படங்களை மட்டுமே விஜயகாந்த் கொடுத்தார்.
#image_title
சேதுபதி ஐபிஎஸ், மகாநதி இரண்டு படங்களுமே கமல், விஜயகாந்துக்கு வெற்றி படங்களாக இருந்தன. 1994ல் வெளியான நம்மவர், பெரிய மருது இரண்டு சுமாரான படங்களாக அமைந்தன. சதிலீலாவதி, அவ்வை சண்முகி மற்றும் 2004ல் வெளியான விருமாண்டி ஆகிய கமல் படங்கள் வெற்றி பெற்றன. விஜயகாந்த் நடித்த தவசி, சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா போன்ற படங்களும் வெற்றிப்படங்களாக இருந்தன. கமல், விஜயகாந்த் 1981 முதல் 2004 வரை மொத்தம் 24 ஆண்டுகளில் அவர்கள் நடித்த 22 படங்கள் நேருக்கு நேர் போட்டியிட்டுள்ளன.
#image_title
இதில் அதிக படங்களில் வெற்றி பெற்றது நடிகர் கமல்ஹாசன்தான். எனினும் இதில் விஜயகாந்த் சினிமா பயணத்தில் வைதேகி காத்திருந்தாள், உழவன் மகன், நல்லவன், சத்ரியன், சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம் போன்ற பல முக்கிய வெற்றி படங்களும் அடங்கியிருக்கின்றன. அதுபோல் கமலின் பெயர் சொல்லிய மூன்றாம் பிறை, காக்கி சட்டை, புன்னகை மன்னன், நாயகன்,. மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன், மகாநதி, அவ்வை சண்முகி, அன்பே சிவம், விருமாண்டி முக்கிய படங்களும் இருக்கின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…