#image_title
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டு பாதியிலேயேக் கைவிடப்பட்ட மூன்று படங்கள் பற்றிப் பார்க்கலாம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு செல்வராகவன் விக்ரம் மற்றும் சுவாதியை வைத்து ‘சிந்துபாத்’என்ற படத்தைத் தொடங்கினார் . இதற்காக டார்ஜிலிங்கில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஆனால் படம் அதன் பிறகு தொடரவில்லை. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சிம்புவை வைத்து “கான்” என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடத்திப் பின்னர் கைவிடப்பட்டது.
கடைசியாக சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷூட்டிங் நடந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. இந்த படங்கள் எல்லாம் இனிமேல் வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றுதான் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் செயல்படும் சென்னை பல்கலைக்கழகம் சமீபத்தில் மரபியல் ஆய்வு திட்டத்திற்கான பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான…
இந்து சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கடவுளைத் தேர்ந்தெடுப்பது சாதாரண விஷயம். ஏனெனில் இந்து மதத்தில் ஒரே பரமாத்மா பல…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்து,…
திருமண வீட்டின் மகிழ்ச்சியான சூழலில், நண்பர்கள் செய்த ஆபத்தான விளையாட்டால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே கடந்த காலங்களில் நிலவிய…