LONG- வைரலான திருநங்கைக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் வீடு தேடி வந்த அதிர்ஷ்டம் …!

Spread the love

திருநங்கைகளுக்காக பிரத்தியோகமாக நடத்தப்படும் திருவிழா தான் கூவாகம் திருவிழா. இந்த திருவிழாவில் கலந்து கொண்டது மூலம் மக்கள் இடத்தில் மிகவும் பிரபலமானார் திருநங்கை அனு ஸ்ரீ வேலன். இவர் பிரபலமான நிலையில் பல முன்னணி யூட்யூப் சேனல்களை இவரை அழைத்து பேட்டி எடுத்தது. இதன் மூலம் மீண்டும் பிரபலமானார் திருநங்கை அனுஸ்ரீ வேலன். தான் திருநங்கையாக மாறியது தங்களது வீட்டிற்கு பிடிக்கவில்லை என்றும் தான் இப்படி மாறியதால் தங்களது குடும்பம் அந்த ஊரை விட்டு காலி செய்து சென்று விட்டதாகவும் கூறியிருந்தால் அனுஸ்ரீ வேலன்.

பிரபலமானதை தொடர்ந்து ‘love with transgender’ என்ற ஒரு சீரியஸில் நடித்திருந்தார், இந்த சீரியஸ் யூட்யூபில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் . மேயாத மான், ஆடை, குளுகுளு போன்ற படங்களை இயக்கியவர்தான் இயக்குனரும் லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார். இவர் இயக்கத்தில் ’29’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விது ஹீரோவாகவும் நடிகை பிரீத்தி அஸ்ரானி ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்த 29 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திருநங்கை அனுஸ்ரீ வேலன். கூவாகம் திருவிழாவில் நடந்து போன என்னை ஃபேமஸ் ஆகிய மக்களுக்கு நன்றி, இந்த படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் ரத்னகுமார் சாருக்கும் எனது நன்றி எனக் கூறி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் திருநங்கை அனு ஸ்ரீ வேலன்.

Nanthini

Recent Posts

BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

4 minutes ago

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

10 minutes ago

BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பின்னடைவு…. கலக்கத்தில் திமுக….!!

வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…

16 minutes ago

BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…

21 minutes ago

BREAKING: திமுக முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு…. அதிர்ச்சியில் தலைமை….!!

திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…

25 minutes ago

BREAKING: எடப்பாடி, சேலம் தெற்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலை…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

31 minutes ago