டெல்லியின் பிரசாத் நகர் பகுதியில் ‘டாலர் பாபா’ என்பவருக்குச் சொந்தமான சொத்துத் தகராறு விவகாரத்தில், அவரது சட்டப்பூர்வ வழக்கறிஞராக அசாமைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியுள்ளார். சம்பவத்தன்று சொத்து தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தபோது, அங்கிருந்த கும்பல் ஒன்று அந்தப் பெண் வழக்கறிஞரைத் தாக்கி, உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியுள்ளது.
இருப்பினும், “எனது வாடிக்கையாளரை ஆபத்தில் விட்டுவிட்டுத் தன்னால் வெளியேற முடியாது, என் கடமையை எப்படி நான் கைவிட முடியும்?” எனக் கூறி அவர் வெளியேற மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், போலிஸாரின் முன்னிலையிலேயே அந்தப் பெண் வழக்கறிஞரைக் கொடூரமாகத் தாக்கியதோடு, பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்ததாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. தான் அசாமைச் சேர்ந்த வெளிமாநிலப் பெண் என்பதால் திட்டமிட்டுத் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கண்ணீருடன் போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், எதிர் தரப்பினரும் வழக்கறிஞர் தரப்பு மீது புகார் அளித்துள்ளதால், இரு கோணங்களிலும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…