கர்நாடக மாநிலம் தார்வாரைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான கிரண் ஹொன்னண்ணவர் மற்றும் அவரது கண் மருத்துவர் மனைவி பிரியா ஆகிய தம்பதியினர் தங்களது பத்து வயது மகனுடன் வசித்து வந்தனர். அண்மையில் இவர்களது வீட்டிற்கு வந்த உறவினர்கள், கிரண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் மற்றொரு அறையில், பிரியா தனது பத்து வயது மகன் நிகித் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குத் தவித்துக் கொண்டிருப்பதைச் சற்றும் பொருட்படுத்தாமல், அவன் அருகே படுத்துக்கொண்டு மிக நிதானமாகத் தனது அலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.
பதறியோடிய உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தார்வார் காவல்துறையினர், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிரியாவே தனது கணவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துவிட்டு, மகனையும் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதன்பின்னர் பிரியாவை போலீசார் கைது செய்த நிலையில், அவர் கடுமையான மனநல பாதிப்பால் இந்த விபரீதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…