ஆக்ராவில் 28 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் வர்த்திகா, ஆக்ராவிலுள்ள மனநல நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் (IMHH) எம்.டி (MD) படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது தாய் நீண்ட நேரமாக போன் செய்தும் வர்த்திகா எடுக்காததால், உடன் படிக்கும் சக மாணவர் சித்தார்த் சர்மாவிற்கு தகவல் தெரிவித்தார். சித்தார்த் அங்கு சென்று பார்த்தபோது அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மயக்க நிலையில் இருந்த வர்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தத் தற்கொலைக்கு கடந்த சில மாதங்களாக அவர் அனுபவித்த மன உளைச்சலே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், வர்த்திகா தனது சீனியர் மருத்துவர் ஒருவர் மீது தவறான முறையில் நடந்துகொண்டதாகப் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது, ஆனால் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என முடிவானது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த வர்த்திகா, விசாரணைக்குப் பிறகு பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாகத் தெரிகிறது. ஒரு இளம் மருத்துவர் பாலியல் அத்துமீறல் புகார் அளித்தும் நீதி கிடைக்காத விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளது மருத்துவ உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…