“அந்த மனசு தான் சார் கடவுள்” தனது பிறந்தநாளில் 51,000 தெருநாய்களுக்கு விருந்து… வாயில்லா ஜீவன்களுக்கு பசியாற்றிய நபர்.. பாராட்டும் இணையவாசிகள்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சிவ சேனா கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சுரேஷ் குர்ஜார் தனது 55-வது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமான முறையிலும், நெகிழ்ச்சியான வகையிலும் கொண்டாடியுள்ளார். ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து, சுமார் 51,000 தெருநாய்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை அவர் சிறப்பித்துள்ளார்.

இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்குப் பிறந்தநாள் விருந்து அளிப்பதற்காக, சுரேஷ் குர்ஜார் ஒரு பெரிய குழுவையே இதற்காக நியமித்திருந்தார். சுமார் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நகரம் முழுவதும் சென்று பிஸ்கட், பால் மற்றும் நாய்களுக்கு உகந்த இதர உணவுகளை வழங்கினர். முன்னதாக, தனது வீட்டிலேயே 51 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கேக் ஒன்றை வெட்டி தனது ஆதரவாளர்களுடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாள் குறித்துப் பேசிய சுரேஷ் குர்ஜார், “ஊமைப் பிராணிகளுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதுகிறேன். வழக்கமான கொண்டாட்டங்களை விட, இது மனதிற்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது” என்றார். விலங்குகள் மீதான இவரது இந்த அன்பு மற்றும் அக்கறை சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா, அம்மாவுக்கு இப்படி செய்வீங்களா?”… நீரிழிவு நோயாளிக்கு இண்டிகோ விமானத்தில் நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள்…!!!

விமானம் முழுமையாகத் தரையிறங்கும் வரை பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுவது வழக்கமான பாதுகாப்பு விதிமுறையாகும். இருப்பினும், சில…

1 minute ago

BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.. ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…!!!

திமுக தொண்டரணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த காயத்ரி சீனிவாஸ், தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.எஸ். (KAS) முன்னிலையில்…

9 minutes ago

தேர்வு முடிவுகள் தந்த துயரம்!… பெட்ரூமை பிடுங்கி, லேப்டாப்பை உடைத்த தந்தையின் கொடூர செயல்.. கதறிய மாணவன்… இணையதளத்தில் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!!

பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகக் கருதப்பட்டாலும், அது ஒரு குழந்தையின் வாழ்க்கையை விடவும், சுயமரியாதையை…

14 minutes ago

கண்காட்சியில் நேர்ந்த பயங்கரம்!.. நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சீறிய ராட்டினம்.. தூக்கி வீசப்பட்ட மக்கள்.. பீகாரை மிரளவைக்கும் பகீர் சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சசாரம் மாவட்டத்தில் உள்ள பைலட் பாபா தாம் அருகே நடைபெற்ற லண்டன் கருப்பொருள் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு…

25 minutes ago

“அடிச்சுக்கிற மாதிரி நடிப்போம்.. ஆனா ஒன்னா இருப்போம்!”… விஜய் அரசை வீழ்த்த கைகோர்த்த திமுக – அதிமுக?… பின்னணி என்ன?… அதிரும் தமிழக அரசியல்…!!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச்…

37 minutes ago

இனி சென்னை – திருச்சி… மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறந்த மாஸ் ரயில்.. ‘டெஸ்ட் ரன்’ சக்சஸ்… புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே…!!!

தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண…

44 minutes ago