கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வட மாநிலத்தை சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவரை பாலியல் ரீதியாக யாரோ துன்புறுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தினமும் பள்ளி செல்வதற்காக மாணவி பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள டீ கடையில் வேலை பார்க்கும் கவியரசன் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கவியரசன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தையும் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் மாணவியின் தந்தை மற்றும் காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…