உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், விளையாடும் போது ஆடையில் சேறு படிந்து அழுக்கானதற்காக 6 வயது பெண் குழந்தையை அவளது தந்தையும், சித்தியும் அடித்துக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்ரம் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிஷா ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தை ஷிபாவை கொடூரமாகத் தாக்கியதுடன், கடும் குளிரில் இரவு முழுவதும் வீட்டின் மாடியில் தவிக்க விட்டுள்ளனர். மறுநாள் காலை அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் விலா எலும்பு முறிவு உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பெற்ற மகளையே ஆடை அழுக்கான காரணத்திற்காகத் தந்தை மற்றும் சித்தி சித்ரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காசியாபாத் போலீசார், அக்ரம் மற்றும் நிஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…