“அப்பா, நான் உன் பொண்ணு பா”.. என்ன விட்ரு ப்ளீஸ்”…. 14 வயது மகளை 3 நாள் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… இறுதியில் நடந்த கொடூரம்…!

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள நவசாரி மாவட்டத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 43 வயதான அந்த நபர், வீட்டில் தையல் தொழில் செய்து வந்துள்ளார். அவர் தனது 14 வயது மகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கடந்த மே மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், இக்கொடூர செயலுக்குப் பின் சிறுமிக்கு கருத்தடை மாத்திரைகளையும் அவர் வழங்கியுள்ளார். தந்தையின் தொடர் மிரட்டல் காரணமாக அச்சமடைந்த சிறுமி, இந்த அவலத்தை யாரிடமும் கூறாமல் நீண்ட நாட்களாக மௌனமாகவே கடந்துள்ளார்.

சமீபத்தில் இந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் ஒருவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த உறவினர் உடனடியாக சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்தார். தன் கணவரின் இந்த கொடூர முகத்தை அறிந்த தாய், சிறிதும் தாமதிக்காமல் காந்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாயின் புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை உடனடியாகக் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது செல்போனில் அடிக்கடி ஆபாச காணொளிகளைப் பார்க்கும் பழக்கம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து மருத்துவ மற்றும் தடயவியல் மாதிரிகளைச் சேகரித்துள்ள அதிகாரிகள், இந்த மிக மோசமான குற்றச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

1 minute ago

காலை 10 மணிக்கு கதவடைப்பு… 11:30-க்கு போலீசாருடன் மோதல்… பனையூர் தவெக அலுவலகத்தில் திடீர் ட்விஸ்ட்… அலறியடித்து பின்வாசல் வழியே ஓடிய அதிமுக விஐபிக்கள்….!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…

14 minutes ago

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

25 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

29 minutes ago

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

40 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

52 minutes ago