மகனுக்கு செக் வைத்த அப்பா… ‘அய்யா பாமக’ ரெடி.. புதிய கட்சியுடன் களமிறங்கும் ராமதாஸ்… தலைவர் யாரு பாருங்க?… அதிரும் அரசியல் களம்…!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் மோதல், தற்போது புதிய கட்சித் தொடக்கம் வரை சென்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், ராமதாஸ் அவர்கள் சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கே சாதகமாக முடிவெடுத்துள்ளதால், ராமதாஸ் தரப்பு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய சூழலில் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் அன்புமணியின் வசமுள்ளதால், தேர்தல் களத்தில் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்த ராமதாஸ் தரப்பு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ‘அய்யா பாசறை மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. இதன் சுருக்கமான ‘அய்யா பாமக’ (AYYA PMK) என்ற பெயரிலேயே தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அவர்கள், இதற்கானப் பதிவு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த புதிய கட்சியைப் பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன் பெயரில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், தேர்தல் நெருங்குவதால் மாற்று ஏற்பாடாக இந்த ‘அய்யா பாமக’ களம் காண உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த நேரடி அரசியல் போர், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் சமூக வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago