அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், 6 வயது மகனை உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கூறி ட்ரெட்மில்லில் ஓட வைத்துச் சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்த கொடூரத் தந்தைக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
நியூஜெர்சி மாநிலம் பார்கட் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் கிறிஸ்டோபர் கிரிகோர் என்பவர் தனது 6 வயது மகன் கோரி மைசியோலோவை உடற்பயிற்சி செய்ய வைத்துள்ளார். மகன் அதிக எடையுடன் இருப்பதாகக் கூறி, ட்ரெட்மில்லின் வேகத்தை அதிகரித்து ஓட வைத்துள்ளார். இதில் சிறுவன் நிலைதடுமாறித் திரும்பத் திரும்பக் கீழே விழுந்தபோதிலும், இரக்கமின்றி அவனை மீண்டும் மீண்டும் ட்ரெட்மில்லில் ஏற்றி ஓட வைத்துள்ளார். சில தருணங்களில் அச்சிறுவனின் தலையைக் கடிப்பது போன்ற கொடூரக் காட்சிகளும் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுவன் கோரி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், நீதிமன்றத்தில் அந்தக் கொடூர வீடியோ திரையிடப்பட்டபோது சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரைக் கண் கலங்கச் செய்தது. வழக்கை விசாரித்த நியூஜெர்சி பெருநகர நீதிமன்றம், மனிதநேயமற்ற முறையில் சிறுவனின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…