சேலம் மாவட்டம் மேட்டூர் ஆண்டிக்கரைப் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான வல்லரசு (26) என்பவருக்கும், அவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் (22) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாகக் கோபித்துக் கொண்டு, ஸ்ரீபிரியா தனது இரு குழந்தைகளுடன் மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, மனைவியைச் சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக வல்லரசு தனது மாமியார் வீட்டிற்குச் சென்று பேசியுள்ளார். அப்போதும் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதால், விரக்தியடைந்த வல்லரசு தனது நான்கு வயது மகள் மைவிழி மற்றும் இரண்டு வயது மகன் தர்ஷன் ஆகியோருடன் அந்த வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் தூங்கச் சென்றுள்ளார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஸ்ரீபிரியாவும் அவரது தாயாரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும், அதற்கு முன்பாகத் தனது இரு பிஞ்சு குழந்தைகளையும் தூக்கிலிட்டுக் கொடூரமாகக் கொன்றதும் தெரியவந்தது. ஒரே அறையில் மூன்று பேர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் கதறித் துடித்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கோர விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…