Categories: இந்தியா

“காதலனுக்காக கணவரை பிரிந்த மகள்…” குடும்ப கௌரவத்தைக் காக்க விஷம் கொடுத்த தந்தை…. குலை நடுங்க வைக்கும் கொடூரம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெலகாவியில் குடும்பக் கௌரவம் என்ற பெயரில் இளம்பெண் ஒருவரை அவரது தந்தையே விஷம் கொடுத்துக் கொன்று எரித்த பயங்கரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்யவ்வா என்ற அந்தப் பெண், தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை, அண்ணன் மற்றும் மைத்துனர் ஆகியோர் அவரைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், காதலனுடனான உறவை முறித்துக்கொள்ள சத்யவ்வா மறுத்ததால், மூவரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்துப் படுகொலை செய்துள்ளனர்.

குற்றத்தை மறைக்க அப்பெண்ணின் உடலைச் சுடுகாட்டில் வைத்து உடனடியாகத் தகனம் செய்துள்ளனர். இதற்கிடையில் காதலன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த வாக்குமூலம் உண்மையை வெளிப்படுத்தியது. இதையடுத்து, படுகொலை மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருந்த தந்தை உட்பட மூவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

13 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

23 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

34 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

41 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

1 மணத்தியாலம் ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago