இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 318 ரண்களை எடுத்து இருந்தது. இதில் ஜெயஸ்வால் 173, கேப்டன் சுப்மன் கில் 20 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் இருவரும் தொடர்ந்து விளையாடினர். இரட்டை சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 175 ரன்னில் அவுட் ஆனார்.
போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலே அவர் பெவிலியன் திரும்பினார். அவர் ரன் அவுட் ஆனது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனைப் போலவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் இதுபோன்ற ஒரு ரன் அவுட் ஆகும். அப்போது எதிர்திசையில் கில் இருப்பார். ரோகித் சர்மா பந்து அடித்து விட்டு வா என்று கூறி ஓடுவார். ஆனால் கில் அதனை கவனிக்காமல் வந்து செல்லும் திசையை பார்த்து அப்படியே நின்று விடுவார். அந்த சமயத்தில் ரோஹித் எதிர் திசைக்கே வந்து ரன் அவுட் முறையில் வெளியேறுவார். அதனைப் போல தான் தற்போது இந்த முறையும் ஜெய்ஸ்வாலின் கால் என்ன என்பதை கவனிக்காமல் பந்து எங்கு செல்கிறது என்பதை கில் பார்த்துக் கொண்டிருப்பார்.
இதனை வைத்து ரசிகர்கள் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். ஸ்ட்ரைக்கர் கால் செய்த பிறகு நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் வீரர் அவரை தான் பார்க்க வேண்டும், அவருடைய கால் என்ன சொல்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. கில் செய்தது தவறு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.. ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரின் ரன் அவுட் விஷயத்தில் கில் செய்தது தவறு எனவும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பதில் கில்லுக்கு விருப்பமில்லை என்றும் ரசிகர்கள் தாறுமாறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…