Categories: சினிமா

பிரபல ஹாலிவுட் இயக்குனர், KGF நடிகர் யாஷ் திடீர் சந்திப்பு…! ஒருவேளை அப்படியா இருக்குமோ…?

Spread the love

பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார்.

இவர் நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வம் காரணமாக காரணமாக 12-ம் வகுப்பு முடித்த கையோடு 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து பல டிராமாக்களில் நடித்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் 2007 இல் ஜம்படா ஹுடுகி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரது திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘மோகினி மனசு’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து ராக்கி, கல்லற சந்தே, கோகுலா, மோடலசாலா, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா, சுந்தரபாண்டியன் ரீமேக்கான   ‘ராஜாஹூளி’ , ‘கஜகேசரி’, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, சந்து  ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’, கே.ஜி.எஃப் 2 என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது யாஷ் பிரசாந்த் நீள் இயக்கத்தில் கேஜிஎப்3 பாகத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் யாஷ் ஹாலிவுட்டில் களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே லண்டன் சென்றுள்ள நடிகர் யாஷ், அங்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் நடிகருமான ஜேஜே பெர்ரியை சந்தித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பெர்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அடுத்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

4 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago