மக்களே உஷார்..! விஜய் பெயரில் வரும் போலி லிங்க்குகள்… சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி எச்சரிக்கை..!!

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் ஆர்வத்தைப் பயன்படுத்திப் பணத்தைத் திருடும் புதிய வகை சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் ‘ஜன்தன் திட்டத்தின் கீழ் ரூ.5,000 உதவித்தொகை’, ‘தளபதி விஜய் பெயரில் ரூ.1,499 ஆஃபர்’ மற்றும் ‘ஜிபே (GPay) ரிவார்டு’ போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் சமூக வலைத்தளங்களில் போலி லிங்க்குகள் (Fake Links) வேகமாகப் பரப்பப்படுகின்றன. இலவசங்கள் மற்றும் சலுகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பயன்படுத்தி, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரிப்பதே இந்த மோசடி கும்பலின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் கிரைம் போலீசார், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்தகைய லிங்க்குகளைத் தொடுவதன் மூலம் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படவோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் இதுபோன்ற போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

KKR பந்துவீச்சை துவம்சம் செய்த சுப்மன் கில்… “50 பந்துகளுக்கு 86 ரன்கள் போதுமா?”… அகமதாபாத்தில் கில் செய்த மேஜிக்…!

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.…

2 minutes ago

“டிகிரி/டிப்ளமோ இருந்தா போதும்!… RBI-யில் மாதம் ₹47,700 சம்பளத்தில் வேலை… மே 6 கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் சிவில் பிரிவில் 7 இடங்களும், எலெக்ட்ரிக்கல் பிரிவில் 4 இடங்களும் என மொத்தம் 11 இளநிலை…

7 minutes ago

“ஒரே ஒரு இறைச்சி துண்டு, ஒரு கேரட்”… நடுக்கடலில் தவிக்கும் அமெரிக்க வீரர்கள் – கண்ணீர் மல்கும் குடும்பத்தினர்… உணவுக்காகக் கையேந்தும் அமெரிக்கப் படை…!

உலகிலேயே அதிக ராணுவ பலமும், தற்காப்புத் துறைக்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் வல்லரசு நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஆனால், ஈரானுக்கு…

9 minutes ago

“ஓவர்நைட்டில் எல்லாமே மாறிடுச்சு”… ஈரான் திடீரென பின்வாங்கியது ஏன்?… திரைமறைவில் நடந்த ரகசிய ஒப்பந்தம்… பதற்றத்தில் உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த உச்சக்கட்ட பதற்றம், ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை' (Strait of Hormuz)…

12 minutes ago

“எல்லாமே அந்த 16-ல தான் இருக்கு”… ராகுல் காந்தி கொடுத்த சஸ்பென்ஸ்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்….!

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் மீதான விவாதம் தற்போது அனல் பறந்து வருகிறது. இந்த…

17 minutes ago

“B.sc​ பட்டதாரியா நீங்க?… ஜிப்மரில் வேலை.. மாதம் ₹33,000 சம்பளம்… மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க உடனே கிளிக் செய்யுங்க”…!!!

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரின் காது, மூக்கு, தொண்டை (ENT) துறையில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டத்திற்காக இப்பணியிடம்…

20 minutes ago