திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கான நேர்காணலுக்கு வந்த நபர் ஒருவர், போலி சிபிஐ அதிகாரி என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கூந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற அந்த நபர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடியுள்ளார். அவரைப் பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரிடம் பல்வேறு போலி அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைதான வேல்முருகன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சிபிஐ, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு காவல் பணிகள் சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, சில தனியார் ஊடகங்கள், அரசு துறைகள் மற்றும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உள்ளிட்ட அரசியல் கட்சியின் போலி அடையாள அட்டைகளையும் அவர் தயாரித்து தன்வசம் வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வேல்முருகனைப் பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் உயர் புலனாய்வு அமைப்புகளின் பெயர்களில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து அவர் வேறு ஏதேனும் மோசடித் திட்டங்களில் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…