அமெரிக்காவின் சிகாகோ நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அங்குர் படேல் என்ற நபர், பிரிந்து வாழ்ந்த தனது மனைவி புதிய துணையுடன் வாழ விரும்புவதாகக் கூறியதால் ஆத்திரமடைந்து அவரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்களுக்கு இடையே குழந்தை விவகாரம் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்து வந்த நிலையில், மகளைச் சந்திப்பதாகக் கூறி மனைவியை ஏமாற்றி சிகாகோவிற்கு வரவழைத்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
மனைதியைக் கொலை செய்த பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்ட அங்குர் படேல், சிகாகோ விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு உடனடியாக டிக்கெட் கிடைக்காததால் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கி, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அகற்றிவிட்டு, மறுநாள் ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டை வாங்கியுள்ளார். இருப்பினும், விமானத்தில் ஏறும் முன்பே சிகாகோ காவல்துறையினர் அவரைத் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையின் போது, ஆரம்பத்தில் மனைதியைக் கொல்லும் திட்டம் தனக்கு இல்லை என்றும், ஆனால் அவர் தன்னுடன் வாழ மறுத்துவிட்டு புதிய துணையுடன் செல்ல விரும்புவதாகக் கூறியதால் ஆவேசத்தில் அவரைக் கொன்றதாகவும் படேல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…