அதிமுக தலைமைக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையிலான உட்கட்சி மோதல் இன்னும் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எஸ்.பி.வேலுமணி போன்ற முக்கிய நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துச் சமரசமாகிவிட்ட நிலையில், சி.வி.சண்முகம் தொடர்ந்து தலைமையுடன் உடன்படாமல் முரண்டு பிடித்து வருகிறார். அவருடன் அரசியல் ரீதியாகக் கைகோர்த்து நின்ற விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துவிட்டபோதிலும், சி.வி.சண்முகம் அதிமுகவை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறாமல் அமைதி காக்கிறார். திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படாததே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதிமுக வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தையின் புகைப்படங்களைப் போலியாகச் சித்தரித்து இணையத்தில் பரப்பியதையும், ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண் நிர்வாகிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து அவதூறு பரப்புவதையும் அவர் சுட்டிக்காட்டினார். “புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் கட்டிப் பாதுகாத்த இயக்கத்தில், இன்று பெண்களின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இதுபோன்ற அவதூறுகளை எடப்பாடி பழனிசாமி தட்டிக்கேட்காமல், ரசித்துக் கொண்டிருக்கிறார்” எனத் தலைமை மீது நேரடியாகவே தனது அதிருப்திக் கணைகளை எய்தியுள்ளார்.
அதேவேளையில், காவல்துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். CM விஜய் நல்லாட்சி தர நினைத்தாலும், அதிகாரிகளின் செயல்பாட்டால் அதில் பின்னடைவு ஏற்படுவதாக CV சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார் . “பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவே சிங்கப்பெண் அதிரடிப் படையைக் கொண்டுவந்தீர்கள், ஆனால் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்துகிறது. எனவே, காவல்துறையை முறையாகச் செயல்பட அறிவுறுத்த வேண்டும்” என விஜய்க்கு நேரடியாக முறையீடு செய்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளரைக் கடுமையாக விமர்சிப்பதும், அதே சமயம் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைப்பதுமாக உள்ள சி.வி.சண்முகத்தின் இந்த நகர்வு, அவர் விரைவில் தவெகவில் இணைவதற்கான முதற்கட்ட அறிகுறியா அல்லது அதிமுகவிற்குள் தனது பலத்தைக் காட்ட நடத்தும் போராட்டமா என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…