#image_title
எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான ஹரிப்ரியா தற்போது புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன திரையில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஹரிப்ரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைகள் நுழைந்த இவர் பின்னர் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார்.
பிறகு சன் டிவியில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த சீரியலான பிரியமானவள் என்ற சீரியலில் இசை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலமாக பலரும் இவரை இசை என்றே அழைத்து வந்தார்கள். அந்த அளவுக்கு இவரின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருந்தது. பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் சன் டிவியில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் என்ற சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் கதாபாத்திரம் இந்த சீரியலில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. காமெடி கலந்து இவர் பேசும் வசனங்கள் பலவும் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் இவர் மற்றும் ஆதி குணசேகரன் ஆக நடித்த மறைந்த மாரிமுத்து இருவரின் காம்போவும் மிகச் சிறப்பாக இருக்கும்.
இவர் 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்கள். பல வருடம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் ஹரிப்ரியா தற்போது புதிதாக நடன பள்ளி ஒன்றையும் தொடங்கியிருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் நோட்டீஸ்களை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். காலி கல்பா என்று பேயரிடப்பட்டிருக்கும் இந்த நடன பள்ளி கோடம்பாக்கம் மற்றும் போரூர் ஆகிய இரண்டு இடங்களில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் ஜெயவேல் முருகன் இயக்கும் வருணன் திரைப்படத்தில் ஹரிப்ரியா நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தை யாக்கை ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு பெண்ணின் மீது அவரது சொந்த மைத்துனரே காரை ஏற்றிப் படுகொலை…
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில், தண்டவாளத்தில் சரிந்து விழுந்த கட்டுமான கிரேன் மீது மோனோரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான…
டெல்லி விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை ஒன்றில், பெண் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகக் கவுண்டர் மற்றும் அதன் புதுமையான…
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவப் பயிற்சி ஒத்திகையின் போது இரண்டு போர் பயிற்சி விமானங்கள் நடுவானில் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில்,…
ஹைதராபாத்தில் சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற கொடூரச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஹுசைனி…
ஜான்பூர் மாவட்டம், பக்ஷா காவல் எல்லைக்குட்பட்ட தரியாகஞ்ச் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கைநீர் இறைப்பான் அருகில்…