தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி தான். என்னதான் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாலும் ஆரம்பகாலத்தில் இருந்து சன் டிவிக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சீரியல்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கி வந்த இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்துவின் குணசேகரன் கதாபாத்திரம் தான்.
ஆனால் திடீரென இவர் உயிரிழந்ததால் அவருடைய மரணத்திற்குப் பிறகு கதையின் போக்கு திசை மாறிய நிலையில் சில மாதங்களில் எதிர்நீச்சல் சீரியலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. விரைவில் எதிர்நீச்சல் 2 சீரியல் வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கவில்லை என்று அவரே தெரிவித்து விட்ட நிலையில் ஜனனி கதாபாத்திரம் என்றால் அனைவரும் விரும்புவார்கள். உடனே அனைவருக்கும் மதுமிதா முகம்தான் ஞாபகத்திற்கு வரும்.
ஆனால் அவரே தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தான். இந்த நிலையில் மதுமிதாவுக்கு பதில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரை தொகுப்பாளினியாக பிரபலமான இவர் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக பார்வதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…