அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடப்பாடியார் தலைமேற்ற பின் அதிமுகவின் சொத்துகளும் வங்கி இருப்பும் உயர்ந்துள்ளதே தவிர குறையவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு, 2026 தேர்தல் தாக்கல் சான்றிதழின்படி ரூ. 534.90 கோடி மதிப்பிலான சொத்துகள் எப்படி வந்தன என்றும், உழைத்து சம்பாதித்தாரா அல்லது மாமனார் சொத்தை அபகரித்தாரா என்பதை அவர் பொதுவெளியில் விளக்க வேண்டும் என்றும் அதிமுக காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் சுதந்திரமான முடிவுகளை மதிக்கும் பக்குவம் அதிமுகவுக்கு எப்போதும் உண்டு என்று அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், தங்களது கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளை மதிக்காமல், பொதுக்கூட்டங்களுக்குக்கூட வராமல் ‘நவீன தீண்டாமையை’ கடைபிடிக்கும் கட்சித் தலைவரைத் தன் தலைவராகக் கொண்டுள்ள ஆதவ் அர்ஜுனா, அதிமுக கூட்டணியைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது என்று சாடியுள்ளது.
அதிமுகவின் உண்மையான மூலதனம் அதன் தொண்டர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் சொந்த உழைப்பில் நின்றே வெற்றிபெறும் தெம்பும் திராணியும் அதிமுகவுக்கு உள்ளது. திமுக தயவாலும் தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் பலத்தாலும் ஆட்சியைக் கடத்திக் கொண்டிருக்கும் த.வெ.க-வுக்கு, உயிரைக் கொடுத்து உழைக்கும் தொண்டர்களைக் கொண்ட அதிமுக இயக்கத்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் அருகதையும் இல்லை என அதிமுக உறுதியாகத் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…