தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையுள்ளதாக கூறியது இபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இப்படியான நிலையில் அதிமுகவை எப்படியாவது மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈபிஎஸ் இறங்கியுள்ளார். என் நிலையில் தென் மாவட்ட நிர்வாகிகளும் பாஜக தலைமையும் கொடுத்த அழுத்தம் காரணமாக ஓபிஎஸ்ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க இபிஎஸ் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் தனது தலைமையை ஏற்பதாக ஓபிஎஸ் அறிவிக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டுள்ளாராம். அதேபோல டிடிவி தினகரனை சேர்க்கவே முடியாது என்றும் கூறிவிட்டாராம். நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்பின்போது இது தொடர்பாகத்தான் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…