இனி GPay, PhonePe இருந்தா மட்டும் போதும்… பிஎஃப் ஆபிஸ் போகவே வேண்டாம்… ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்….!

Spread the love

வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், பிஎஃப் (PF) கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. இதன்படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் யுபிஐ (UPI) மூலமாகவே நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது பிஎஃப் பணத்தைப் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும்போது உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடி-ஐ பயன்படுத்தி மிக எளிதாகவும், விரைவாகவும் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக தொழிலாளர் அமைச்சகம் தனது மென்பொருள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால் சுமார் 8 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளைத் தீர்வு காண்பதில் இபிஎஃப்ஓ (EPFO) அலுவலகத்திற்கு ஏற்படும் நிர்வாகச் சுமையைக் குறைக்கவே இந்த நேரடிப் பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்படுகிறது. இதன்படி, உறுப்பினர்கள் தங்களது பாதுகாப்புக்காக யுபிஐ பின் (UPI PIN) பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யலாம். இந்த பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்தவுடன், அதனை டிஜிட்டல் முறையிலோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ எடுத்துக்கொள்ளலாம். வங்கிகளுக்கு இணையான டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

14 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

21 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

33 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago