நம்மில் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும் அதனை ஒரு மருத்துவ மருந்தாக பயன்படுத்தும் வழிமுறை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். பொதுவாகவே பெரும்பாலானோர் காலை எழுந்ததும் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயை குடிப்பதை தினமும் பழக்கமாக மாற்றினால் உடல் நலத்தில் பல மாற்றங்களை உணரலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம். இதில் உள்ள நல்ல கொழுப்பு மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசி இல்லாமல் நிறைவாக இருக்க உதவும். இதன் மூலமாக இடைவேளையில் தவறான உணவு பழக்கங்களை நாம் தவிர்க்கலாம். மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி பசி உணர்வை குறைக்கும். உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கும். அடுத்ததாக நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய சிக்கலாக இருக்கும். தேங்காய் எண்ணெய் கொழுப்பு வாய்ந்தது என்பதால் ஜீரணத்தில் தாமதம் ஏற்படும். இதன் விளைவாக ரத்த சர்க்கரையின் நிலை ஒரு முறையாக சீராகும்.
தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சினையை கட்டுப்படுத்திய ஹார்மோன் சீரடையும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதனைப் போலவே மூல நோயால் பாதிக்கப்படும் போது மலம் கழிப்பதில் வலி, கடுமையாகியவை ஏற்படும் நிலையில் இதற்கு தீர்வாக வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பது நன்மை தரும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த எண்ணெய் மலம் கழிப்பதை மென்மையாக செய்து மலச்சிக்கலையும் குறைக்கும். இதனைத் தவிர வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். பருவ காலங்களில் எளிதில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடியவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் இந்த நோய்களை தடுக்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…