உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணை, அந்த வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதனால் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது காவல் நிலையத்தை எட்டியதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில், வீட்டின் உரிமையாளர் அந்தப் பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்ததை அறிந்த முதலாளி, இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண் தன் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். இதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காசிப்பூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் குற்றவாளியான வீட்டின் உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…