15 ரூபாய் ஆர்டர்… ஆனால் டிப்ஸ் எவ்வளவு தெரியுமா..? அக்கா நீ என் குலசாமி” பெண் வாடிக்கையாளரின் தாராள குணத்தால் கண்ணீர் விட்ட டெலிவரி ஊழியர்… நெஞ்சை உருக்கும் வீடியோ..

Spread the love

சமூக வலைத்தளங்களில் மனிதநேயத்தை உணர்த்தும் பல நெகிழ்ச்சியான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ‘பிளிங்கிட்’ (Blinkit) நிறுவன ஆன்லைன் டெலிவரி ஊழியர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது. வெறும் 15 ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறிய ஆர்டரை டெலிவரி செய்யச் சென்ற அந்த இளைஞருக்கு, வாடிக்கையாளர் பெண் ஒருவர் கொடுத்த இன்ப அதிர்ச்சிதான் இந்த வைரல் வீடியோவின் பின்னணி.

இன்ஸ்டாகிராமில் @im_blinkit_rider என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், டெலிவரி ஊழியர் தனக்குக் கிடைத்த டிப்ஸை (Tip) மிகவும் நெகிழ்ச்சியோடு காட்டுகிறார். அதில் அவர், “நான் கொண்டு சென்றது வெறும் 15 ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறிய ஆர்டர் தான். ஆனால், அந்த அக்கா எனக்கு எவ்வளவு டிப்ஸ் கொடுத்தார் தெரியுமா? முழுமையாக 500 ரூபாய் கொடுத்திருக்கிறார்!” என்று கண்கலங்கியபடி கூறுகிறார். மேலும், “பொதுவாக என்னால் ஒரு நாளைக்குக் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது, மிக்க நன்றி அக்கா” என்று அந்தப் பெண்ணுக்குத் தனது நன்றியையும் மழலை மாறாத மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் அந்தப் பெண்ணின் தாராள மனதையும், டெலிவரி ஊழியரின் வெள்ளந்தியான குணத்தையும் பாராட்டி வருகின்றனர். தங்களின் கருத்துகளில், “ஒரு சிறிய நற்செயல் மற்றொரு மனிதரின் முழு நாளையும் எவ்வளவு மகிழ்ச்சியாக மாற்றும் என்பதற்கு இதுவே சான்று” என்றும், வறுமையை நேரில் கண்டவர்களால் மட்டுமே அடுத்தவர்களின் தேவையை உணர்ந்து உதவ முடியும் என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago