ஒரு வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபரில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி மற்றும் IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களுடைய EMI நவம்பர் முதல் குறைகிறது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட காலம் கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும்.
