2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டத்திலுள்ள கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் மற்றும் போடி ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுகவே மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ள நிலையில், போடி தொகுதியையும் இம்முறை கைப்பற்ற திமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. தற்போதைய சூழல் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கம்பம் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ள வேளையில், தனித் தொகுதியான பெரியகுளத்தில் மட்டும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. அங்கு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் மூலம் தேனியில் அதிமுகவை வெற்றி பெறச் செய்யப் பல வியூகங்களை வகுத்தாலும், ஓபிஎஸ்-ன் வருகையால் தேனி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…