தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள வேடபட்டியைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி வீரம்மாள், தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக நாகராஜபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார்.
ஆட்டோவில் வந்திறங்கிய வீரம்மாள், அங்கிருந்து ரேஷன் கடையை நோக்கி நடந்து சென்றபோது, திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பரிசு வாங்க வந்த இடத்தில் மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…