உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 82 வயதான ஜெய்தேவ் என்ற அந்த முதியவர், எல்.கே.ஜி (LKG) படித்து வரும் அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பாழடைந்த தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், பேரக் குழந்தை வயதில் உள்ள சிறுமியிடம் இப்படி நடந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடுமை நடந்த பிறகு, அந்த முதியவர் குடும்ப உறவினர் என்பதால், பயம் மற்றும் அவமானம் காரணமாகச் சிறுமியின் பெற்றோர் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருப்பினும், அந்த முதியவர் சிறுமியைப் பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கவனித்துள்ளார். அவர் அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததோடு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.
வீடியோ ஆதாரத்துடன் வெளியே வந்ததையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் தைரியமாகப் காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாகச் செயல்பட்ட போலீஸார், முதியவர் ஜெய்தேவ் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர் என்ற போர்வையில் ஒளிந்திருந்த ஒரு காமவெறியனின் உண்மை முகம் வீடியோ ஆதாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…