பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சாப்ரா பகுதியில் இவ்வாறு வெள்ள நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டரிலிருந்து கீழே வீசியபோது எதிர்பாராத துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மேலே இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருள்களின் மூட்டை, கீழே அதற்காகக் காத்திருந்த 58 வயது முதியவர் ஒருவரின் தலையில் பலமாக விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த மருத்துவ அறிக்கை வெளியான பின்னரே மேலதிக விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அதே பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், நிவாரணப் பணிகளுக்காக வந்த ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாகப் பறந்ததால் ஒரு கூடாரத்தின் மேற்கூரை காற்றில் பெயர்ந்து விழுந்து பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…