“சொத்த பிரிச்சு கொடு”… மது போதையில் தந்தையை துடிக்க துடிக்க கொன்ற மூத்த மகன்.. கள்ளக்குறிச்சியில் பதற்றம்…!!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தில், சொத்துத் தகராறில் மதுபோதையில் இருந்த மகனே பெற்ற தந்தையைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சடையன் (என்ற) ராஜேந்திரன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களில் மூத்த மகன் ஐயப்பன், சம்பவத்தன்று மதுபோதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த தந்தை ராஜேந்திரனிடம் தனக்குரிய சொத்தை உடனே பிரித்துத் தருமாறு ஐயப்பன் கேட்டுள்ளார். தந்தை ராஜேந்திரனும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மகன் போதையில் உளறுவதாகக் கருதி அந்தப் பேச்சைத் தவிர்த்து, வாக்குவாதம் செய்ய வேண்டாம் என அவரைக் கண்டித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த ஐயப்பன் தந்தையின் பேச்சைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்த மகன் ஐயப்பன், வீட்டில் மீன் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராஜேந்திரனின் கழுத்து மற்றும் முகப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளி ஐயப்பனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

3 minutes ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

13 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

23 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

31 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

33 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

38 minutes ago