எடப்பாடிக்கு அடுத்த தலைவலி!…. மேடையிலேயே விழுந்து கும்பிட்டு வெளியேறிய முக்கிய புள்ளி… கள்ளக்குறிச்சியில் தேர்தல் களம் மாற்றம்…!!!

Spread the love

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு அதிரடிச் சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சீட்டுக்காக நகரச் செயலாளர் பாபு தனது மனைவி அழகுவேலுக்காக (முன்னாள் எம்.எல்.ஏ) தீவிரமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், கட்சித் தலைமை ராஜீவ் காந்தியை வேட்பாளராக அறிவித்ததால், கடும் அதிருப்தியில் இருந்த பாபு, மேடையிலேயே தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

வேட்பாளர் கூட்டத்தில் மைக் பிடித்த பாபு, மிகுந்த மன உளைச்சலுடன் உருக்கமாகப் பேசினார். “நான் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்; இனி நகரச் செயலாளர் பதவியில் பணியாற்றும் சூழலில் என் உடல்நிலை இல்லை” என்று கூறியவர், மேடையில் அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அதிரடியாக வழங்கினார். பின்னர் அங்கிருந்தவர்களை வேதனையுடன் விழுந்து கும்பிட்டுவிட்டு, பாதியிலேயே அரங்கிலிருந்து வெளியேறியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பாபுவின் மனைவியும் மாவட்ட மகளிர் அணித் தலைவருமான அழகுவேலுவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2011-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த அழகுவேலுவுக்கு கடந்த முறையும் சீட் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்காததே இவர்களின் இந்தத் தீவிர முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளது கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago