சிவி சண்முகம், வேலுமணிக்கு செக்?… மகன் மிதுனுக்கு மெகா பொறுப்பு…. எடப்பாடியின் திடீர் மூவ்…. அதிர்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்கள்….!

Spread the love

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சியைப் பெரும் அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறிய அதிமுக, தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், கட்சியை மீட்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அவர் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டங்களின் பின்னணியில் தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான காய்நகர்த்தல்களை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மூத்த தலைவர் கே.பி.முனுசாமி மூலமாக இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. “கட்சியில் இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்; எடப்பாடியின் மகன் மிதுன் கட்சிக்குள் வருவதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது” என்று முனுசாமி பேசியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவான அதிமுகவில், இதுவரை எந்தவொரு அடிப்படைப் பொறுப்பிலும் இல்லாத மிதுனுக்கு முக்கியத்துவம் தருவதா என்று அடிமட்ட தொண்டர்கள் கொந்தளித்தனர். அப்போது எழுந்த எதிர்ப்பை அடக்க, “எனது மகன் எப்போதும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்” என்று எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது மீண்டும் அந்த எண்ணம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை (IT Wing) கைப்பற்றி, அதன் மூலம் மிதுனை முன்னிலைப்படுத்த எடப்பாடி திட்டமிட்டு வருவதாகப் பேச்சு எழுந்துள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் ஐடி விங் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி முன்வைத்ததும், இதனால் ராஜ் சத்யன் உள்ளிட்ட ஐடி விங் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதும் இதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. தற்போது நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டங்களில், “கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கலாமா? அவர்களைப் பெரிய பதவிகளில் அமர்த்தலாமா?” என்று எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி கேள்வி எழுப்பி வருவது, அவரது மகன் மிதுனை ஐடி விங் செயலாளராக்குவதற்கான முன்னோட்டமே என்று அக்கட்சியினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

தற்போது அதிமுகவில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி, கூட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த உட்கட்சிப் பிளவையும், தலைவர்களின் இடைவெளியையும் சாதகமாக்கிக் கொண்டு, மிதுனை கட்சிக்குள் கொண்டு வந்தால் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போடுகிறார். வரும் நாட்களில் அதிமுகவின் முக்கியப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளில் மிதுனை மேடயேற்றி, அவருக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி வழங்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களும், அதிமுக உடன்பிறப்புகளும் கிசுகிசுக்கின்றனர்.

Nanthini

Recent Posts

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

3 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

7 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

8 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

23 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

31 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

39 minutes ago