தமிழக சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 8-வது முறையாகப் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று அவர் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக அறியப்படும் தன்னிடம் சொந்தமாக விவசாய நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, எடப்பாடி பழனிசாமியின் பெயரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அவரது மனைவி ராதாவின் பெயரில் அதிகளவிலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராதாவின் பெயரில் ரூ.3.45 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும், ரூ.2.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ரூ.47.64 லட்சம் அசையும் சொத்து இருப்பதாகவும், 100 சவரன் தங்கம் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது அவரது மனைவி பெயரில் ரூ.1.04 கோடி அசையும் சொத்துக்கள் மட்டுமே இருந்தன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது மனைவியின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், விஜய், சீமான் எனப் பல முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ள நிலையில், மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக அரசியலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் எனப் பலமுனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் பிரசாரம் தற்போதே உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைந்து, ஏப்ரல் 23-இல் வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…