பொண்டாட்டி, பிள்ளைகளோட வாழாத… விஜய் பேசுறது பச்சை பொய்… மதுராந்தகம் மேடையில் விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி…!

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் தேர்தல் பரப்புரை உச்சகட்ட சூடடைந்துள்ளது. சமீபத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாச உணர்வுகளை விமர்சித்து நேரடியாகத் தாக்கியுள்ளார். “உங்க வீட்டு அண்ணனாக, மாமனாக இருப்பேன் என விஜய் பச்சை பொய் பேசுகிறார்; பாசம் என்பது தாய், தந்தை, கட்டிய மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளுடன் வாழ்வதில் தான் பிறக்கும்” என்று தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையான சொற்களால் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி தீவிரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் வாய் கிழியப் பேசிவிட்டுச் சென்ற பிரச்சார மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே இந்த கொடூரம் நடந்திருப்பதாகக் சாடினார். சொந்த வீட்டிலேயே சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடப்பதாகக் கூறிய அவர், தற்போதைய முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறார் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதிமுக, திமுக, மற்றும் தவெக ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் மாறி மாறி முகாமிட்டுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த தனிப்பட்ட மற்றும் நிர்வாக ரீதியான காட்டமான விமர்சனங்கள் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், இதற்கு தவெக மற்றும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து வரவிருக்கும் பதிலடிகள் பிரச்சாரக் களத்தை மேலும் சூடேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

3 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

26 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

35 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

40 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

41 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

49 minutes ago