“பதவியை தூக்கி எறியுங்க”… முகத்துக்கு நேராக கொந்தளித்த நிர்வாகி… மேடையில் வெடித்த எடப்பாடி…. அதிமுகவில் பரபரப்பு….!

Spread the love

அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டத் தலைவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், வரும் நாட்களில் கோவை, திருப்பூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் மதுரை பகுதிச் செயலாளர் கந்தன், தேர்தலில் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நேரடியாகக் வலியுறுத்தினார். இதனால் கூட்ட அரங்கில் பெரும் சலசலப்பும் பதற்றமும் உருவானது. நிர்வாகியின் இந்தப் பேச்சைக் கேட்டு கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக குறுக்கிட்டுத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“நான் ஏன் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும்? இந்த கடுமையான சூழலிலும் 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளேன்” என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து கட்சியை பலப்படுத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தலைவரின் இந்த காரசாரமான பதிலடி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago