தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். நேற்று அவர் சிவகங்கை கழக மாவட்ட காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை ஆற்றிய போது, தமிழகத்தில் மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் என அரசு பணத்தில் தன்னை விளம்பரப்படுத்தி வருகின்றார். தமிழக முதல்வர் தினம்தோறும் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு பெயர் வைப்பதில் வல்லவர். அதைக் கூட யாராவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால் அவருக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது. அவர் ஒரு பொம்மை முதல்வர்.
அதற்கு வேண்டுமானால் நாம் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். இப்போதெல்லாம் பத்து ரூபாய் என்று சொன்னவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் நினைவுக்கு வருகிறார். ஏனென்றால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதம் கூடுதலாக விற்பனை செய்து ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் கொள்ளை அடித்து திமுக மேலிடத்தில் கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தண்டனை பெற்று தரப்படும். கொரோனா காலகட்டத்திலும் கூட விலைவாசி உயராமல் அதிமுக அரசு பார்த்துக் கொண்டது. ஆனால் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…