மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.பி. சிங்கின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ஜனநாயகத்தில் சாதாரணமான மனித நடவடிக்கைகளைக் கூடக் குற்றமயமாக்கும் தற்போதைய போக்கைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட உரிமைகள் ஒடுக்கப்படுவது குறித்தும், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இளைஞர்களை சிறையில் அடைப்பது குறித்தும் அவர் தனது கவலையைப் பதிவு செய்தார்.
வாரணாசியில் கங்கை ஆற்றில் படகில் பயணித்தபோது இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறி, 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை நீதிபதி சுட்டிக்காட்டினார். கங்கை நதியில் அசைவ உணவு சாப்பிடுவதைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், புனித நதியை அசுத்தப்படுத்தியதாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் கூறி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. “கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்தச் சட்டத்தின் படியும் குற்றமே இல்லை; அப்படியிருக்க எந்தத் தவறும் செய்யாத அவர்களை 3 மாதங்கள் சிறையில் அடைத்தது நியாயமா?” என்று நீதிபதி வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜனநாயக நாட்டில் அரசைக் கேள்வி கேட்கும் உரிமையும், எதிர்க்கருத்து தெரிவிக்கும் சுதந்திரமும் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், அமைதியான முறையில் போராடும் மாணவர்களும் கைது செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும் போது ‘பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது’, ‘சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது’ என அநியாயமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறினார். சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியின் மீதும் மாணவர்களுக்கே அதிக அர்ப்பணிப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி உஜ்ஜல் புயான், அவர்களிடம் தாம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். விவாதங்களும் மாற்றுக்கருத்துகளுமே ஜனநாயகத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியாளர்களின் இத்தகைய அநீதியான செயல்பாடுகளை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை எச்சரிக்கும் விதமாகத் தனது உரையை நிறைவு செய்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…
பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக…