“டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு”…. அதிமுக கூட்டணியில் இத்தனை இடங்களா?…. அதிர்ச்சியில் அரசியல் களம்….!

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்ததைத் தொடர்ந்து, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை எட்டியுள்ளன.

இந்தக் கூட்டணியில் அமமுக தரப்பில் இரட்டை இலக்கத் தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், தற்போது 7 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள என்டிஏ கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டிற்கான வரவேற்பு பதாகைகளில் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, அவர் அதிமுக கூட்டணியில் இணைவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தினகரன் இந்தக் கூட்டணியில் பயணிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் பாண்டியன் தலைமையிலான கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அமமுகவின் வருகை தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்படும் மொத்தத் தொகுதிகளில் இருந்தே அமமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கான இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

2 மணத்தியாலங்கள் ago