ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் (Bikaner) நகரில் சனிக்கிழமை மதியம் திடீரெனப் பயங்கரமான புழுதிப் புயல் தாக்கியது. பிரம்மாண்டமான மஞ்சள் நிறப் புழுதிப் படலம் ஒட்டுமொத்த நகரத்தையும் சூழ்ந்து முன்னோக்கி நகரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த அதிரடிப் புயலால் பகல் நேரமே இரவு போலக் காட்சியளிக்கும் அளவுக்கு இருள் சூழ்ந்தது. இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவுக்குக்Visibility (பார்வைத்திறன்) குறைந்து, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.
பேய்க்காற்றுடன் வீசிய இந்தப் புயலால் நகரின் முக்கியச் சந்தைகளில் இருந்த கடைக்காரர்கள் அவசர அவசரமாகத் தங்களது கடைகளை மூடினர். பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததோடு, மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உள்ளூர் பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிகானேர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…
வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…
கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…
திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தற்போதைய…